ஆஸி., நியூசிலாந்து எம்.பிக்களை சிறை பிடித்து சிங்கள அதிகாரிகள் அட்டகாசம்
கொழும்பு: இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை கண்டறிவதற்காக வந்த குழுவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு எம்.பிக்களை கைது செய்து அட்டகாசம் செய்துள்ளனர் சிங்கள குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்.
இருப்பினும் பின்னர் இவர்கள் இருவரையும் சிங்கள அதிகாரிகள் விடுவித்தனர். இவர்கள் இருவரும் வடக்கு இலங்கைக்குச் சென்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதித் தமிழர்களைச் சந்தித்து விட்டு கொழும்பு வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாடு நடைபெறும் நிலையில் இலங்கை அதிகாரிகள் செய்த இந்த அட்டகாசத்தால் இரு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் லீ ரியான்னன் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த எம்.பி. ஜான் லோகி ஆகியோர் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்கள் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக வந்திருந்தனர். கொழும்பில் செய்தியாளர்கள் கூட்டத்திலும் பங்கேற்பதாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரையும் திடீரென சிங்கள குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் விசார விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இருவரும் சிறப்பு திட்ட விசாக்கள் மூலம் இலங்கைக்கு வந்திருந்தனர் என்பது அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் இருவரும் விடுவித்தனர் அதிகாரிகள். இந்தத் தகவலை தமிழ் எம்.பி சுமந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருவரையும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வைத்து சிங்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களாம்.
இரு எம்.பிக்களும் தற்போது கொழும்பிலிருந்து தத்தமது நாடுகளுக்குப் புறப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் செயலுக்கு ஆஸ்திரேலிய தூதரகம் கடும் கணட்னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், யார் வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவர்களே இங்கு நடப்பதை பார்த்துச் செல்லலாம் என்று பேசுகிறது இலங்கை அரசு. ஆனால் இப்படி யாராவது வந்தால் தடுப்பது என்ன நியாயம் என்று ஆஸ்திரேலியா கேட்டுள்ளது.
இப்படிப்பட்ட இலங்கைக்குப் பரிந்துதான் கமலேஷ் சர்மா போன்றவர்களும், இந்தியாவைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களும், வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications