For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை தெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. மக்களை எச்சரிக்கும் சபாநாயகர்.. என்ன நடக்க போகிறது?

இலங்கையில் அரசியல் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அங்கு தெருக்களில் ரத்த வெள்ளம் ஓடும் நிலைமை ஏற்படும் என்று அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தெருக்கள் ரத்தத்தால் நிறையும்.. இலங்கை சபாநாயகர் எச்சரிக்கை- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் அரசியல் பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் அங்கு தெருக்களில் ரத்த வெள்ளம் ஓடும் நிலைமை ஏற்படும் என்று அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார். இதனால் அங்கு யார்தான் பாஸ் பிரதமர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    இந்த நிலையில் இலங்கையில் கொழும்பு நகரம் முழுக்க ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்கள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ரணில் மட்டுமில்லாமல் அவரின் ஆதரவாளர்கள் பலரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் அங்கு இவர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய போராட்டம் செய்ய உள்ளனர் என்று தகவல்கள் வருகிறது.

    பெரிய கலவரம்

    பெரிய கலவரம்

    இந்த நிலையில் இலங்கையில் தொடர்ந்து இப்படி அரசியல் குழப்பம் நிலவி வந்தால், பெரிய கலவரத்தை சந்திக்க வேண்டி வரும் என்று அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். அங்கு மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதனால் அங்கு மிகப்பெரிய பிரச்சனை உருவாகும். இது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை என்றுள்ளார்.

    சாலைகளில் ரத்தம்

    சாலைகளில் ரத்தம்

    மேலும், இதனால் இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் மக்கள் தெருவில் இறங்க வாய்ப்புள்ளது. அப்படி மக்கள் தெருவில் இறங்கும் பட்சத்தில் பெரிய கலவரம் ஏற்படும். இலங்கை தெருக்கள் ரத்தத்தில் நிறையும். இதை தடுக்க வேண்டும் என்றால் ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

    இனியும் நடக்கும்

    இனியும் நடக்கும்

    அதேபோல் நேற்று முதல்நாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் ஆட்கள் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பணியாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையும் அவர் சுட்டி காட்டி இருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் தொடந்து நடக்கும் போல தெரிகிறது. உடனே பாராளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்றுள்ளார் கரு ஜெயசூர்யா.

    English summary
    Sri Lanka may see the 'bloodbath' in every street warns, Speaker of Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X