வவுனியால் விடுதலை புலிகளின் துண்டு பிரசுரங்களால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: வவுனியாவில் சில இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Srilanka Police recover pamphlets by LTTE intelligence unit'

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை என்ற பெயரில் புலிகள் லட்சினையுடன் வவுனியா நகரில் சில இடங்களில் இந்த துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த துண்டு பிரசுரத்தில், தமிழீழ சகோதர சகோதரிகளே நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களோடு மக்களாக இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுப்போர் தங்களது குடும்பத்தினரையும் யோசித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Srilanka Police have recovered pamphlets by LTTE intelligence unit.
Please Wait while comments are loading...