ஆமா.. நான் கர்ப்பமாதான் இருக்கேன்.. அதுக்கென்ன.. காட்டு தீயை நானும் அணைப்பேன்.. அசத்திய பெண்!
காட்டு தீயை அணைக்க, 23 வயது கர்ப்பிணி உதவி வருகிறார்
சிட்னி: "ஆமா.. நான் கர்ப்பமாதான் இருக்கேன்.. அதுக்கென்ன.. காட்டுத் தீயை நானும் அணைப்பேன்" என்று இளம்பெண் ஒருவர் தீயணைப்பு படையினருடன் இணைந்து உதவிசெய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்பு திடீரென காட்டு தீ பற்றி கொண்டது.. இந்த காட்டுதீ ஏற்பட 16 வயசு சிறுவன்தான் காரணம் என்று அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று அடித்த வேகத்தில், அந்த காட்டில் தீ கொழுந்துவிட்டு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. இதுபோக வறண்ட வானிலை அங்கு நிலவி வருவதால், தீயின் வேகம் அதிகமாகி கொண்டு இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

கர்ப்பிணி
இந்த காட்டுத்தீயில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகிவிட்டன.. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யதான் ஒரு இளம் பெண் கிளம்பி உள்ளார். இவர் பெயர் கேத் ராபின்சன் வில்லியம்ஸ். தாரீ என்ற நகரத்தைச் சேர்ந்தவர்.. 24 வயசாகிறது.. இப்போதுதான் மூன்றரை மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

தீயணைப்பு வீராங்கணை
பொதுவாக, கர்ப்பிணிகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். அப்படியே ஈடுபட்டாலும் பெரியவர்கள் அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அதை தடுத்து விடுவார்கள். ஆனால், கேத் அப்படி இல்லை.. இவர் ஒரு சாதாரண பெண் இல்லை.. 11 வருஷங்களாக தன்னார்வ தீயணைப்பு வீராங்கணையாக ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது மாசமாக இருக்கும் நேரத்திலும் தீயை அணைக்க கேத் கிளம்பிவிட்டார்.

செல்பி
இதை பார்த்த அவரது சொந்தக்காரர்கள், நண்பர்கள், வேண்டாமே என்று அறிவுறுத்தினர். அதை கேத் காதிலேயே வாங்கவில்லை.. தொடர்ந்து தீயணைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதை பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு செல்பி எடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

கவலையில்லை
அதில், "நான் ஒரு தீயணைப்பு வீராங்கனை. நான் ஒரு கர்ப்பிணி. மற்றவர் சொல்வதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை.. நான் என் வேலையில் நன்றாகவே இருக்கிறேன். இதை எப்பவுமே கைவிட போவது இல்லை.. என் உடல் நிறுத்த சொன்னால் மட்டுமே நிறுத்துவேன்" என்று நச்சென ஒரு பதிவு போட்டுள்ளார். கேத் போட்ட இந்த பதிவுக்கு பெருமளவுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், உற்சாகங்களுக்கு நடுவில், களத்தில் குதித்து.. ஸாரி.. காட்டுக்குள் குதித்து பேருதவி செய்து வருகிறார் இந்த இளம் கர்ப்பிணி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications