சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சிட்னி: இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா சுனாமியில் சிக்கித்தவிக்கும் இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்கு 4 புதிய தொற்றுக்கள்கொரோனா சுனாமியில் சிக்கித்தவிக்கும் இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்கு 4 புதிய தொற்றுக்கள்

பீதியில் ஆழ்த்திய கொரோனா

பீதியில் ஆழ்த்திய கொரோனா

கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை திக்குமுக்காட வைத்துள்ளது. தினமும் 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-ஐ தாண்டி விட்ட உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா, இந்திய மக்களை மட்டுமல்லாது உலக மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

பதறும் உலக நாடுகள்

பதறும் உலக நாடுகள்

தற்போது இந்தியாவின் பெயரை கேட்டாலே பல்வேறு நாடுகள் பதறியடித்து கொண்டு காத தூரம் ஓடுகின்றன. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கும், தங்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்குமான நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்து இருந்தது.

குறுக்கு வழியில் சென்ற வீரர்கள்

குறுக்கு வழியில் சென்ற வீரர்கள்

ஆனால் ஆஸ்திரேலியர்கள் பலர் இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்தனர். சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிட்ச்சர்ட்சன் ஆகியோரும் இதே முறையை பயன்படுத்தி தங்கள் நாட்டுக்கு சென்றனர்.

5 ஆண்டு ஜெயில்

5 ஆண்டு ஜெயில்

இந்த நிலையில் இந்தியாவில் இருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. இதையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது. தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The country has aggressively announced that going to Australia from India is punishable by up to 5 years in prison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X