"சுற்றிலும் கடல்! நாயுடன் தனியாக சிக்கிய இளைஞர்!" அதுவும் 3 மாதத்திற்கு.. சினிமாவை மிஞ்சும் பயங்கரம்
சிட்னி: திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் ஒரு சம்பவம் பசிபிக் பெருங்கடலில் நடந்துள்ளது. அங்கே பல மாதங்கள் தனித்துவிடப்பட்டிருந்த நபர் ஒருவர் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
"லைப் ஆப் பை" திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அதில் சின்ன பையன் ஒருவன் நடுக்கடலில் பல நாட்கள் புலியுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதணையாக இருப்பார்கள்.

அப்படி பல மாதங்கள் அவர்கள் கடலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
சுமார் மூன்று மாதங்களாகக் கடலில் மாயமாகியிருந்த நபர் ஒருவரும் அவரது நாயும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிம் ஷாடாக் என்பவரும் அவரது செல்ல நாய் பெல்லாவும் பல மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு இப்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது: டிம் கடந்த ஏப்ரல் மாதம் மெக்சிகோவிலிருந்து பிரெஞ்சு பாலினேசியா செல்ல திட்டமிட்டிருந்தார். பிரெஞ்சு பாலினேசியா என்பது ஐரோப்பாவில் இருக்கும் பிரான்ஸ் இல்லை. இது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். சாகச விரும்பியான டிம் சிறிய ரக படகில் பிரெஞ்சு பாலினீசியாவுக்கு கிளம்பினார். இருப்பினும், அவரது பயணத்தில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தன.

அவரது பயணத்தை தொடங்கிய சில நாட்களிலேயே திடீரென மோசமான வானிலை தாக்கியுள்ளது. இதனால் அவரது படகில் இருந்த எலக்ட்ரானிக் கருவிகள் சேதமடைந்தது. இதனால் அவரும் அவரது செல்ல நாய் பெல்லாவும் பசிபிக் பெருங்கடலில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும், சில நாட்களில் தன்னை யாராவது வந்து மீட்டுவிடுவார்கள் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
3 மாதங்கள்: அப்படியே சில நாட்களைத் தனிமையில் பசிபிக் பெருங்கடலில் தவித்தார். சில நாட்கள் என்பது சில வாரங்கள் ஆனது. சில வாரங்கள் என்பது சில மாதங்கள் ஆனது. இருப்பினும், அவரை காக்க யாருமே வரவில்லை. உடன் எடுத்துச் சென்ற தண்ணீரையும் கடலில் இருந்து மீனைப் பிடித்து அதை அப்படியே சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டு காலத்தைக் கழித்துள்ளனர். இதற்கிடையே சுமார் 90 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் படகை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது மீன்பிடி சாதனங்களையும் உயிர்வாழத் தேவையான சில கருவிகளையும் மட்டும் உடன் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த இரண்டையும் வைத்துக் கொண்டே சுமார் 90 நாட்கள் இவர்கள் வெற்றிகரமாக உயிர் பிழைத்துவிட்டனர். இதற்கிடையே இவர்களை மீட்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக டிம் கூறுகையில், "நீண்ட காலம் கடலில் தனிமையில் இருந்துள்ளோம்.. இப்போதைக்கு எனக்கு ஓய்வும் நல்ல உணவும் மட்டும் தான் தேவை. அதைத் தவிர நான் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். படகில் கிளம்பும் முன்னரே தேவையான சில உயிர் பிழைக்கும் கருவிகளை எடுத்தே சென்றேன். அது தான் இத்தனை நாட்கள் என்னைக் காப்பாற்றியது" என்று அவர் தெரிவித்தார்,
செல்ல நாய்: டிம்மிற்கு இணையாகப் பலரும் கடைசி வரை தனது உரிமையாளருக்கு உறுதுணையாக இருந்த அந்த நாயையும் பாராட்டி வருகின்றனர். மீனைப் பிடிக்க அந்த நாயும் டிம்மிற்கு உதவியுள்ளது. மேலும் சூழலை உணர்ந்து டிம்மிற்கு தன்னால் முடிந்தவரை சப்போர்ட்டும் செய்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications