தினேஷ் கார்த்திக்கை விடுங்க.. தமிழில் பேசிய 2 வெளிநாட்டு வீரர்கள்.. திட்டம் போட்டு விக்கெட்.. வாவ்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் தமிழில் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது.
ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை நடந்து வருகிறது. உலகக் கோப்பை டி 20 தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றது.

ஆனால் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது.
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய 186-7 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கே. எல் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். முக்கியமாக அஸ்வின் பவுலிங் போடும் போதெல்லாம் அவர் தமிழில் பேசினார். நீ நியாபகம் வச்சுக்கோ. சைடுலயே போடு. ஸ்மித் அடிக்க மாட்டேன். நீ யோசிக்காம போடு.
அவனுக்கு ஸ்லோ பாலே போடு. அவன் அடிக்க மாட்டான் என்று தமிழில் பேசினார். அதேபோல் கே. எல் ராகுலிடமும் அவர் தமிழிலேயே பேசினார். அந்த பக்கம் இரு.. இந்த பக்கம் இரு என்று கூறினார்.
வாய் தவறி விராட் கோலியிடம் கூட.. வா வா கோலி என்று தமிழில் பேசினார்.
பொதுவாக தினேஷ் கார்த்திக் இப்படி தமிழில் பேசுவது வழக்கம்தான். இதில் அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் வேறு ஒரு ஆட்டத்தில் இந்த உலகக் கோப்பையில் வீரர்கள் இருவர் தமிழில் பேசினார்கள். இரண்டு வெளிநாட்டு வீரர்கள் தமிழில் பேசினார்கள்.
அதோடு அவர்கள் தமிழில் பேசியே விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவில் தற்போது தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கும், நெதர்லாந்து அணிக்கும் இடையில் நேற்று மேட்ச் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து கடைசியில் வெற்றிபெற்றது.
இதில் இரண்டு அமீரக வீரர்கள்தான் ஆட்டத்தின் போது தமிழில் பேசினார்கள். பவுலர் மெய்ப்பன் மற்றும் கீப்பர் அரவிந்த் இருவரும் தமிழில் பேசினார்கள். இவர்கள் அமீரக அணிக்காக ஆடுகிறார்கள். என்ன இவர்கள் பெயர் தமிழர்களின் பெயர்கள் போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஆம் இருவருமே தமிழர்கள்தான். மெய்ப்பன் திருச்சியை சேர்ந்தவர்.
அதேபோல் அரவிந்த் சென்னை சேர்ந்தவர். இவர்கள் ஆட்டத்தின் போது.. மச்சான் லெப்டில் போடு.. அவன் ஸ்லோவா ஆடுறான். கொஞ்சம் வெளிய கூட போடலாம்.. அவனுக்கு தெரிஞ்சிடுச்சு. நீ உள்ள தான் வர்றேன்னு. அதனால் வெளியே போடு என்று கீப்பர் அரவிந்த் கூறினார்.
அதன்படியே மெய்ப்பன் பவுலிங் செய்தார். நிறைய டைம் இருக்கு போடு என்று கூறினார். முக்கியமாக வீரர் ஒருவருக்கு கூக்ளி வீசும்படி மெய்ப்பன் கூறினார். அதன்படியே அவர் கூக்ளி வீச நெதர்லாந்து வீரர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவர்கள் இருவரும் தமிழில் பேசி திட்டம் போட்டு விக்கெட் எடுத்தது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
இவர்கள் இருவரும் தமிழர்கள் என்றாலும் வெளிநாட்டு வீரர்களாகவே கருதப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள் அமீரகத்தில் குடியுரிமை பெற்று, இங்கே குடியுரிமையை ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications