சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபத்து! 30 லட்சம் தேனீக்களுக்கு "லாக்டவுன்" போட்ட ஆஸ்திரேலியா! இதுவரை இப்படி நடந்ததே இல்ல! என்னாச்சு

Google Oneindia Tamil News

சிட்னி: 2020-2021 முழுக்க மனிதர்கள் நாம் லாக்டவுனில் வாழ்ந்தோம்.. வீட்டை விட்டு வெளியே போக முடியாது.. அப்படியே போனாலும் இந்த நேரத்தில்.. மாஸ்க் அணிந்து.. இப்படித்தான் போக வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா காலம் மனிதர்களை வீட்டு சிறையில் அடைத்தது.

இப்போது ஆஸ்திரேலியாவில் அதேபோல் தேனீக்கள் "கூட்டு" சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. ஆம்.. ஆஸ்திரேலியாவில் தேனீக்களுக்கும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. என்னங்க சொல்றீங்க தேனீக்களுக்கு லாக்டவுனா? அதுக்கு ஏதும் கொரோனா வேரியண்ட் பரவுதா? சும்மா கூண்டில் அடைப்பதை இப்படி சொல்லாதீங்க என்று கூறுகிறீர்களா?

இல்லை பாஸ் உண்மையிலேயே ஆஸ்திரேலியாவில் தேனீக்களுக்கு லாக்டவுன் போட்டு இருக்கிறார்கள். ஏன்? எப்படி லாக்டவுன் போடப்பட்டது? வாருங்கள் பார்க்கலாம்!

வேணாம்.. ஆபத்து! இப்ப இலங்கை போகாதீங்க... நாட்டு மக்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா அரசு வேணாம்.. ஆபத்து! இப்ப இலங்கை போகாதீங்க... நாட்டு மக்களை எச்சரிக்கும் ஆஸ்திரேலியா அரசு

பூச்சிகள்

பூச்சிகள்

உலகம் முழுக்க வார்ரோ மைட் என்ற பூச்சி இனங்கள் உள்ளன. இந்த பூச்சி இனங்கள் அமெரிக்கா, ஐரோப்பாவில் அதிகம் காணப்படும். இவை தேனீக்களை தாக்கும் ஒருவகை ஒட்டுண்ணி பூச்சிகள் ஆகும். தேனீக்களை தாக்கி, அதன் உடலில் இருந்தே தேனை எடுத்து வளரும். சிவப்பு நிறத்தில் தேனீயை விட பல மடங்கு சிறியதாக இருக்கும் பூச்சிகள் ஆகும் இவை. ஒரு தேனீயில் இருந்து இன்னொரு தேனீக்கு இவை பரவும் திறன் கொண்டது.

எபிடெமிக்

எபிடெமிக்

அதாவது கிட்டத்தட்ட தேனீக்களிடம் ஏற்பட்டுள்ள எபிடெமிக் என்று சொல்லலாம். இது ஏன் ஆபத்து என்றால்.. இவை தேனீக்களை பாதிப்பு அடைய செய்யும். அதன் பறக்கும் திறனை குறைக்கும். தேனீக்களின் தேன் எடுக்கும் திறனை, விதைகளை பரப்பும் திறனை இது பாதிக்கும். இந்த வார்ரோ மைட் பூச்சிகள் காரணமாக மொத்தமாக தேனி இனமே அழியும் அபாயம் கூட உள்ளது. ஒரு வாரத்தில் தேனீக்களின் காலணிகளை காலி செய்யும் திறன் வார்ரோ மைட் பூச்சிகளுக்கு உள்ளது.

 கொடூர பூச்சிகள்

கொடூர பூச்சிகள்

உலகம் முழுக்க தேனீக்கள் குறைந்து போக மனிதர்களை விட வார்ரோ மைட் பூச்சிகள்தான் காரணம். உலகம் முழுக்க பல இடங்களில் தேனீக்களின் காலணிகளை வார்ரோ மைட் அழித்துள்ளது. இதனால் தேன் உற்பத்தி பாதிக்கும். அதோடு பூச்சிகள் இடையே உள்ள சமநிலை, சூழலியல் சமநிலை, விவசாயம் ஆகியவையும் பாதிக்கப்படும். தற்போது ஆஸ்திரேலியாவிலும் இதே வார்ரோ மைட் பரவி வருகிறது.

வார்ரோ மைட்

வார்ரோ மைட்

ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் வார்ரோ மைட் பரவினாலும்.. இப்போது பரவுவது போல மிக தீவிரமாக பரவியது இல்லை. அங்கு நியூகாஸ்டல் பகுதியில் வார்ரோ மைட் பரவி வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட இடங்களில் வார்ரோ மைட் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை வார்ரோ மைட் இதுவரை அங்கு தாக்கி உள்ளது. வார்ரோ மைட் தாக்கிய தேனீக்களை அது பறக்கும் விதம், தேன் எடுக்கும் விதம் ஆகியவற்றை பார்த்து கண்டுபிடிக்க முடியும்.

 அழிக்கிறார்கள்

அழிக்கிறார்கள்

இதை வைத்து அங்கு வார்ரோ மைட் பரவாமல் தடுக்க ஏற்கனவே வார்ரோ மைட் மூலம் பாதிக்கப்பட்ட தேனீக்களை கொன்று வருகிறார்கள். இதுவரை 60 லட்சம் தேனீக்களை ஆஸ்திரேலியாவில் இதற்காக கொன்றுள்ளனர். அதாவது வார்ரோ மைட் பாதிக்கப்படாத தேனீக்களுக்கு பரவ கூடாது என்பதால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தேனீக்களின் காலணிகளை தாக்கி அழித்து வருகிறார்கள். நன்றாக இருக்கும் தேனீக்களும் பாதிக்கப்பட்டால் அங்கு மொத்தம் தேனீக்களின் காலணிகள் காலியாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காலணிகள் காலியாகும்

காலணிகள் காலியாகும்


மீதம் இருக்கும் தேனீக்களை பாதுகாக்க அங்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கு கண்டெயின்மெண்ட் சோன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாங்க கட்டுப்பாட்டு பகுதி! அதன்படி வார்ரோ மைட் பாதிக்கப்படாத தேனீக்களின் காலணிகள், வளர்ப்பு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களை நிர்வகிக்கும் ஆட்களிடம் அதை சுற்றி வலை போட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனீக்களுக்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்


மொத்தமாக வார்ரோ மைட் பாதிக்கப்பட்ட தேனீக்கள் அழிக்கப்படும் வரை இந்த நல்ல தேனீக்கள் லாக்டவுனில் இருக்கும். அவையும் வெளியே போனால் அதற்கும் வார்ரோ மைட் தாக்கும் அபாயம் உள்ளதால் இந்த ஏற்பாடு. வலை மூலம் தேனீக்கள் வெளியே செல்லாமல் மொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 30 லட்சம் தேனீக்கள் இப்படி லாக்டவுனில் போடப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், தேனீக்களை பாதுகாக்க இதுதான் ஒரே வழி என்று ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Why does Australia put millions of Bees in Lockdown? What is the reason ? 2020-2021 முழுக்க மனிதர்கள் நாம் லாக்டவுனில் வாழ்ந்தோம்.. வீட்டை விட்டு வெளியே போக முடியாது.. அப்படியே போனாலும் இந்த நேரத்தில்.. மாஸ்க் அணிந்து.. இப்படித்தான் போக வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X