15 வயது மாணவனின் காதல்.. அதை எதிர்த்த 13... கத்திக்குத்து.. போலீஸ் விசாரணை!
கோவை: காலம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. 10ம் வகுப்பு மாணவனின் காதலை, 7ம் வகுப்பு படித்த மாணவன் எதிர்த்துள்ளான். இந்த மோதலில் 10ம் வகுப்பு மாணவனை 7ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி விட்டான்.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராம் என்பவரின் மகன் ஸ்ரீராம் (நிஜப் பெயர் அல்ல). 15 வயதாகும் ஸ்ரீராம் 10ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவியைக் காதலித்துள்ளான் ஸ்ரீராம். ஆனால் இந்தக் காதலுக்கு அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பள்ளியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஆதரவாக சிலர் சேர்ந்து பள்ளியிலேயே சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டின் அருகே ஸ்ரீராம் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 7ம் வகுப்பு மாணவனும், அவனது 17 வயது நண்பர் ஒருவரும் சேர்ந்து ஸ்ரீராமிடம் சண்டை பிடித்துள்ளனர். பின்னர் கத்தியால் அவனை சரமாரியாக குத்தி விட்டு ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தோர் காயமடைந்த ஸ்ரீராமை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்திய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications