கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது.. 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: புளியரை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசியில் இருந்து கேரளாவுக்கு சென்ற அரசு பேருந்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷிபு என்பவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல ஆரியங்காவு சோதனை சாவடியில் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் கொட்டாரக்கரை பேருந்தில் பயணம் செய்த வினு என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நூதன முறையில் காலில் 500 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்தும் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவி்ததுள்ளனர். தமிழகத்தில் புளியங்குடி, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தொடர்ந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications