சிதறிய உடல்கள்.. பறிபோன 2 உயிர்கள்! விபத்துக்குள்ளான ஆட்டோ -“காப்பாற்ற” ஓடிய இருவர்! எமனாக வந்த லாரி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான ஆட்டோவை மீட்க சென்ற 2 லாரி ஓட்டுனர்கள் மீது அதிவேகமாக வந்த மற்றொரு லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் என்றத இடத்தில் வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஓட்டுநர் விநோத் குமாரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த பேரிகாட் மீது வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

 மீட்க வந்த லாரி ஓட்டுநர்கள்

மீட்க வந்த லாரி ஓட்டுநர்கள்

வினோத்குமார் ஆட்டோ விபத்துக்கு உள்ளானதை அவ்வழியாக சென்ற லாரி ஓட்டுநர்கள் மற்றும் அருகாமையில் இருந்தவர்கள் கண்டு அவரை மீட்க ஓடி வந்தனர். விபத்துக்குள்ளான ஆட்டோவில் சிக்கி படுகாயங்களுடன் வெளியேற வர முடியாமல் வினோத்குமார் போராட்டிக் கொண்டு இருந்தார்.

வேகமாக வந்த லாரி

வேகமாக வந்த லாரி

அவரை லாரி ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஆட்டோவில் இருந்து மீட்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அது, அங்கு விபத்துக்குள்ளான ஆட்டோ மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதியது.

இருவர் உயிரிழப்பு

இருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்பாடி மேல்மயில் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ராஜா ஆகிய இரண்டு லாரி ஓட்டுநர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த கிராமிய போலீசார் இருவர் உடல்களை மீட்டனர்.

 போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை


படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+