குட்டையில் மூழ்கி இரு சிறுமிகள் தற்கொலை... ஆரணியில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரணி: ஆரணியை அடுத்த பையூரில் குட்டையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இரு மாணவிகளில் ஒருவரது உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர்.

ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி சரண்யா (17), 7- ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி (12). இவர்கள் இருவரும் பையூர் எம்ஜிஆர் நகர் பாறை குட்டை குளத்தில் விழுந்து தற்கொலை செயது கொண்டனர்.

2 girls were drowned in pond water in Arani

இதில் சிறுமி தர்ஷினியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் சரண்யாவின் உடலை தேடும்பணி நடைபெற்று வருகிறது. இவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், ஆரணி கிராமிய காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2 girls made suicide by drowning in pond water in Arani. One's body recovered, searching going on for other one.
Please Wait while comments are loading...