திருச்சி அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதி கவிழ்ந்து 2 பேர் பலி- 12 பேர் காயம்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட இருவர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை அந்த பேருந்து திருச்சியை கடந்து துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதையடுத்து டிரைவர் திருமூர்த்தி பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தினார். பின்னர் பயணிகளை கீழே இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பி கொண்டிருந்தனர்.

டிரைவர் திருமூர்த்தி பஞ்சரான டயரை கழற்றிக்கொண்டிருந்தார். அந்த சமயம் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்து ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு பஞ்சராகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதனால் திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்து அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டு சாலையோரத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதன் மீது மோதிய தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருப்பத்தூர் அரசு பேருந்து டிரைவர் திருமூர்த்தி மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதே போல் தூத்துக்குடி சென்ற பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில்பட்டியை சேர்ந்த மலைச்சாமி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications