எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய படகை சோதனை செய்தபோது இலங்கை யாழ்பானத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்ரீராஜ் மற்றும் யசாந்தன் அதில் இருந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்தாகவும், வழி தவறி இங்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.' இதனையடுத்து 2 இலங்கை மீனவர்களையும் வேதாரண்யம் கடற்கரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மீனவர்கள் இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்ற தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் சந்திரன் முன் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் இருவரையும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் இருவரும் அடைக்கபட்டனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications