சேலை கொடுத்த திமுகவினரை தடுத்த அதிமுக தொண்டரை கத்தியால் குத்திய பெண்கள்...ஸ்ரீரங்கத்தில்!!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வேட்டி, சேலை கொடுத்த திமுகவினரை தடுத்த அதிமுக பிரமுகரை இரண்டு பெண்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ள நிலையில் வெளியூர்வாசிகள் காலி செய்து வருகின்றனர்.

இன்று மாலை 4 மணியளவில் அனைத்து கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திருவானைக்காவல் பகுதியில் திமுகவினரும் அதிமுகவினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு திமுகவினர் ரகசியமாக பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் தெரியவரவே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் சிலர் திமுகவினரை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கண்ணதாசன் என்ற அதிமுக தொண்டர் திமுகவினரை தடுத்துள்ளார்.
கத்திக்குத்து, கைது
இதில் ஆத்திரமடைந்த வெளியூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கண்ணதாசனை கத்தியால் குத்தினர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அங்கிருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய இரண்டு பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் வெளியூரைச் சேர்ந்த பெண்கள் என்பதும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ஸ்ரீரங்கம் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினரால் தீ விபத்து
இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதியில், மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தி.மு.க.வினர் வெடித்த பட்டாசு விழுந்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. திருப்பராய்த்துறை அருகேயுள்ள அனலை கிராமத்தில், மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்காக சென்றபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தி.மு.க.வினர் ஏராளமான பட்டாசுகளை வெடித்தனர்.

அப்போது, அங்கிருந்த வீடு ஒன்றின்மீதும், வைக்கோல் போர் மீதும் பட்டாசு விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications