வேனில் வந்த 20 கிறிஸ்தவர்கள்.. மொத்தமாக சிறைபிடித்த இந்து முன்னணியினர்.. மதமாற்றம் என சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே மதமாற்றம் செய்ததாக வேனில் வந்த கிறித்துவர்களை சிறைப்பிடித்து இந்துமுன்னணியினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி: மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி வேனில் கிறிஸ்தவர்களை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கிறித்துவ மதம் சார்ந்த துண்டுபிரசுரங்களை வழங்கி மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவறிந்த இந்து முன்னணியினர் கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வேனில் வந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவர்களை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications