For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி: 2007-ல் ஆ ராசா மத்திய அமைச்சராக பதவியேற்றது முதல் 2017 டிச.21-ல் விடுதலையானது வரை!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு இன்று முடிவுக்கு வந்த ஸ்பெக்ட்ரம் -2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு கடந்து வந்த பாதை இதுதான்...

    2G Spectrum Case: A Timeline of Major Events

    2007

    மே - மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றார்.

    ஆகஸ்ட்- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு பணிகள் தொடக்கம்

    2008

    ஜனவரி - முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

    2009

    அக்டோபர் - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு என சர்ச்சை. மத்திய தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பெயர் எதனையும் குறிப்பிடாத வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    2010

    மே - கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவுடன் அமைச்சராக இருந்த ஆ. ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ லீக்

    செப்டம்பர்- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 70,000 ஆயிரம் கோடி முறைகேடு என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

    நவம்பர்- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.

    நவம்பர்- மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா பதவி விலகினார்.

    2011

    பிப்ரவரி - ஆ.ராசா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த்தா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா கைது செய்யபட்டனர்

    மார்ச் - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உருவாக்கம்.

    மே - கருணாநிதி மகள் கனிமொழி, கலைஞர் டிவியின் ஷரத் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    மே - கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார்.

    அக்டோபர் - முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    அக்டோபர் - ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான விசாரணை தொடங்கியது.

    நவம்பர் - கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    2012

    பிப்ரவரி - அமைச்சராக ஆ. ராசா ஒதுக்கிய 122 நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அதிரடியாக ரத்து.

    பிப்ரவரி - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி என அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடியானது.

    மே- ஆ. ராசா ஜாமீனில் விடுதலையானார்.

    ஆகஸ்ட் - உச்சநீதிமன்றத்திலும் ப. சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடியானது.

    2014

    ஏப்ரல் - ஆ. ராசா மற்றும் கனிமொழி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

    மே - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் செயல்பட்டேன் என ஆ. ராசா வாக்குமூலம்.

    2015

    ஜுன் - கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி முறைகேடாக சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

    2017

    ஏப்ரல்- சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கின் விவாதங்கள் முடிவடைந்தன.

    டிசம்பர் 5- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 21-ல்) வெளியிடப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்தார்.

    டிசம்பர் 21- குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    English summary
    A chronology of the events related to the 2G spectrum allocation scam case from the time A Raja became Telecom Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X