விழுப்புரம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தன் மகள் கலைச்செல்வி(16) மற்றும் பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகர்(35) ஆகியோருடன் காரில் மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்றனர். சாமி தரிசனம் முடிந்த பின்னர் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று பிற்பகல் அவர்களது கார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. தாறு மாறாக ஓடிய கார் எதிரே செஞ்சியில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது மோதியது.
இதில் கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்த செஞ்சி, போலீசாரும், தீயணைப்பு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிராம மக்கள் உதவியுடன், மீட்பு பணிகள் நடைபெற்றன.
இருப்பினும் காரில் இருந்த நாகராஜ், சந்திரசேகர், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய கலைச்செல்வியை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த, 27 பயணிகள் காயமடைந்தனர். அனைவரும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications