சென்னையில் பட்டப்பகலில் 3 கிலோ தங்கம் அபேஸ்.. நகை பட்டறை ஊழியர்களுக்கு வலை
சென்னை: சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
சௌகார்பேட்டையில் ராஜூபுனியா என்பவர் நகைப் பட்டறையை வைத்துள்ளார். இங்கு நகை செய்யும் தொழிலில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தன்னிடம் இருந்த 3 கிலோ எடை கொண்ட 375 சவரன் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக சௌகார்பேட்டை காவல் நிலையத்தில் ராஜூபுனியா புகார் அளித்துள்ளார்.

மேலும் தன் கடையில் பணிபுரிந்த தொழிலாளர்களே அந்த தங்கத்தை அபேஸ் செய்து சென்றதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 83 லட்சமாகும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சம்பவம் எப்போது, எப்படி நடந்தது என்பது குறித்தெல்லாம் விசாரிப்பதோடு, திருடர்களை தேடி வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!