கும்பகோணத்தில் அமரனுக்கு எதிர்ப்பு.. கமல், சிவகார்த்திக்கேயன் படங்களை நெருப்பால் எரித்து போராட்டம்
கும்பகோணம்: அமரன் படத்திற்கு எதிராகவும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 21 படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சிவகார்த்திக்கேயன் பிறந்தநாளன்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. டீசர் வெளியானது.

வழக்கமான காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திக்கேயன் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவப் படையை பிடித்து அவர்களை கொலை செய்வது போல டீசர் தொடங்குகிறது.
காஷ்மீர் மக்களின் விடுதலை பற்றி படம் பேசுகிறதா அல்லது அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா என்பதை படம் வந்த பின்பு தெரியவரும். இந்த நிலையில் 'அமரன்' பட டீசரில் காஷ்மீர் இளைஞர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும், பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கண்டித்து கும்பகோணத்தில் போராட்டம் நடைபெற்றது.
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்களை அவதூறாக சித்தரித்துள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கமல்ஹாசன், சிவகார்த்திக்கேயனுக்கு கண்டன முழக்கமிட்டனர்
அமரன் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்களை கிழித்து காலால் மிதித்து செருப்பால் அடித்து நெருப்பு வைத்து எரித்தனர். உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமரன் படத்தின் டீசர் வெளியான சில தினங்களில் கும்பகோணத்தில் கமல், சிவகார்த்திக்கேயனுக்கு எதிராக விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications