தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலி.. அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக நெல்லை, மதுரை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 people have died due to dengue fever in Tamil Nadu: Minister Vijayabaskar

டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காமல் முடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் ஈரோட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் டெங்குக்காய்ச்சல் குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Vijayabaskar said that 35 people have died due to dengue fever in Tamil Nadu. He also said that nobody should be afraid of dengue fever.
Please Wait while comments are loading...