புதுக்கோட்டை அருகே வேன் மீது டிராக்டர் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டையில் வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தாளப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கவிதா திருமணத்துக்காக சென்ற உறவினர்கள் அறந்தாங்கியில் இருந்து ஏழுப்பட்டிக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கந்தர்வர்கோட்டை அருகே புதுநகர் என்ற இடத்திற்கு அருகில் வந்த போது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் கவியரசு, மகேந்திரன், மற்றும் ராமராசு, மாரிமுத்து, சஞ்ஜெய் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கந்தர்வர்கோட்டை காவல்துறையினர் உடல்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications