மாதவரம் தொழிலதிபர் வீட்டில் துணிகரம்: 40 சவரன் நகைகள்-ரூ.11 லட்சம் கொள்ளை
மாதவரம் தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாதாவரத்தில் தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாதவரம் விஆர்டி நகரில் வசித்து வருபவர் மேத்ருபால் சிங். இவர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் பீரோவிலிருந்து 40 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் 11 லட்சம் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், உடனடியாக இதுகுறித்து மாதவரம் போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications