காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் சடலமாக மீட்பு
மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரியில் குளித்தபோது 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட 5 பேரில் 4 பேரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 19 ஆம் தேதி காவிரியில் பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்து, காவிரி ஆறு கரையோரப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், இன்று மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் பெருந்துறை விஜயமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் - மைதிலி தம்பதியினர் மற்றும அவர்களுடைய மகன் சிறுவன் ஹரிஹரன், மகள் ரவீனா ஆகியோர் குளிக்கச் சென்றுள்ளனர். அதே போல, ரெட்டியூரைச் சேர்ந்த மாணவி வாணிஸ்ரீயும் தனுஸ்ரீயும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் காவிரியில் செல்லும் நீரின் வேகம் தெரியாமல் ஆற்றுக்குள் குளிக்க இறங்க ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப்பார்த்த அருகில் கரையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக கூக்குரலிட்டுள்ளனர். காவிரி ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்டது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு மீட்பு படனையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு படையினர் மாணவி தனுஸ்ரீயை மட்டும் மீட்டனர். மற்ற ஐந்து பேரையும் தீயணைப்பு மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

ரெட்டியூரில் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி, மகன், மகள் என நான்கு பேரும் ஒரு மாணவி வாணிஸ்ரீ என மொத்தம் ஐந்து பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு மீட்புபடையினரும் ரெட்டியூர் மக்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்த 5 பேர்களையும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தேடி வருகின்றனர். இதில் தற்போது சரவணன்- மைதிலி தம்பதி, வாணிஸ்ரீ, சிறுவன் ஹரிஹரன் ஆகிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications