ஸ்ரீரங்கம் தேர்தல் பணிக்கு 50 பேர் குழு! ஒட்டுமொத்த கேபினெட்டையும் களமிறக்கிய ஜெ.!!
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 50 பேர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ப.மோகன், பா.வளர்மதி, செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, சின்னையா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர், மேலும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன.
ஒட்டுமொத்த அமைச்சரவையே ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் களப்பணியாற்றப்போகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற துணை சபாநாயகர்களும் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது ஸ்ரீரங்கம் தேர்தலை ஜெயலலிதா ஒரு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பது புரிகிறது. எளிதாக வெற்றி கிடைத்துவிடும் என்று ஜெயலலிதா நம்பவில்லை என்பதையும் அவரது வியூகம் தெளிவுபடுத்துகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications