ஊட்டியில் தனியார் கட்டுமான பணியின் போது மண் சரிந்து 6 பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டியில் தனியார் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ராயல் கேஸ்ட் எனும் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இதிலிருந்து 6 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அது போல் ஒரு ஆணும் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து மற்றவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications