மாற்றுத் திறனாளி பெண்ணைப் பலாத்காரம் செய்துவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
தருமபுரி: தருமபுரியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகேயுள்ள மூக்கனூரில் கடந்த 2002 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 19 வயது பெண் ஒருவரை அருகேயுள்ள ஜக்குபட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் பழங்குடியினத்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
பெண்ணைக் கடத்துவது, பாலியல் பலாத்காரம் செய்வது ஆகிய இரு பிரிவுகள் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ராஜாவுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கடுங்காவல் சிறைத் தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications