தூத்துக்குடி அருகே படகு கவிழ்ந்து விபத்து.. 9 பேர் பலி.. பலர் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய பலரது கதி தெரியவில்லை.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் 20க்கு மேற்ப்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றர். இந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து 20க்கு மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது படகானது மணப்பாடு அருகே வந்த போது கவிழ்ந்தது. இதனால் படகில் சென்ற பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

கடலில் விழுந்து தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் பலியானார்கள். கடலில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த 9 பேரில் 4 பேர் பெண்கள், 2 சிறார்கள் ஆவர்; அனைவரும் திருச்சி மற்றும் திருச்செந்தூர் பட்டுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்டவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்களும் தங்களது படகுகளுடன் கடலில் தத்தளிப்பவர்கள காப்பாற்றுவதற்கான கடலுக்குள் விரைந்துள்ளனர்.
மீன் பிடிக்கும் படகில் அனுமதியின்றி 20க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படகை ஓட்டிச் சென்ற செல்வம் என்பவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications