கடையநல்லூரில் ஐடி மாணவன் வெட்டி கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: கடையநல்லூரில் ஐடிஐ மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேலக்ககடையநல்லூர் சுடலைமாடன் கோவில் தெருவை சார்ந்த கந்தசாமி மகன் முருகன். 17 வயதான இவர் வீ கே புதூர் அரசு ஐடிஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

A 17 years old college student killed in Nellai Kadaiyanallur

நேற்று மாலை நண்பர்கள் செல்போன் அழைப்பின் பேரில் வீட்டை விட்டு சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது அருகில் உள்ள பெரிய குளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் முருகனின் உடலை கைபற்றி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

A 17 years old college student killed in Nellai Kadaiyanallur

மேலும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 17 years old college student killed in Nellai Kadaiyanallur. Police arrested two and inquire about the murder.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற