Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிக்கடி உல்லாசம்.. எல்லை மீறும் அரேபிய பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டு தரக்கோரி நாகை பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் மனு கொடுக்க வந்த பெண், கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறுகையில், எனது கணவர் கவாஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்து உள்ளனர். அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண் என் கணவரிடம் அத்துமீறி வருகிறார். அவரை மீட்க வேண்டும் எனறு வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், கத்தார், ஓமன் உள்பட பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களே அதிகம் செல்கிறார்கள். அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை உள்பட தென்மாவட்ட மக்களும் வளைகுடா நாடுகளில் வேலைக்கு அதிகம் செல்கிறார்கள்.

A 50-year-old woman fell in love with Gavaskar who went to Saudi Arabia to graze a flock of sheep

சிங்கப்பூர், மலேசியாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு மக்கள் வளைகுடாவிற்கு செல்வது வழக்கமாக உள்ளது. வளைகுடாவில் படித்துவிட்டு அதிக சம்பளம் கிடைக்கும் பெரிய வேலைகள் ஒருபுறம் எனில், கூலி வேலைக்கு செல்வோரும் அதிகமாக உள்ளனர். பெட்ரோல் கிணறுகளில் வேலை செய்யவும், கூலி வேலை செய்யவும் பலர் வளைகுடா நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். முறையாக அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தின் மூலம் அல்லது தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலை தளத்தில் விண்ணப்பித்து வேலைக்கு செல்வோருக்கு எல்லாமே சட்டப்பூர்வமாக கிடைக்கும்.

அதேநேரம் சிலர் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து வேலைக்கு சேர முயற்சிப்பார்கள். சில ஏஜெண்டுகள் வேலையை தவறாக கூறி, ஏமாற்றி விற்றுவிடுவார்கள்.. அப்படி அடிக்கடி வளைகுடா நாடுகளில் நடக்கிறது. வளைகுடா நாடுகளில் இப்படி வந்து ஓட்டகம் மேய்ப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் அதிகம். அப்படி ஆடு, ஓட்டகம் மேய்க்கும் நாகப்பட்டினம் மாவட்டம் பெரியதும்பூரைச் சேர்ந்த கவாஸ்கர் என்பருக்கு அங்கு ஒரு பெண் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவரது மனைவி புகார் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் பெரியதும்பூர் பகுதியை சேர்ந்த உதயஜோதி என்பவர் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறுகையில், "எனது கணவர் கவாஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்து உள்ளனர். அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண்ணை வைத்து கணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் விலங்குகளிடமும், பாலியல் தொல்லை செய்யச்சொல்லி அடித்துள்ளனர். இந்த கொடுமைகள் குறித்து என்னிடம் போனில் கூறி அழுதார். இருக்கும் இடத்தை கூட எனது கணவரால் கூறமுடியவில்லை. எனவே சவுதி அரேபியாவில் பலவிதங்களில் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வரும் எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+