நெல்லையில் பரவும் டெங்கு.. 2 பேர் உயிரிழப்பால் பதற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனும் சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நெல்லை டவுண் மகிழ்வண்ண நாதபுரத்தை சேர்ந்த கோதர்கனி. இவரது மகள் ரிவானா. டவுண் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

A boy and a girl were killed by the mysterious fever near in Nellai

மேலும் காய்ச்சலும் இருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் மயங்கி விழுந்த அவரை மாலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்தார். இதுகுறித்து டவுண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போல் களக்காடு நெடுவிளையை சேர்ந்த ஆபிரகாம் மகன் செல்டன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான்.

இந்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அதிகாலை அவன் இறந்தான்.

களக்காடு பகுதியில் தொடர்ந்து மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A boy and a girl were killed by the mysterious fever near in Nellai. Public is afraid of the spreading fever.
Please Wait while comments are loading...