For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்! இருவரும் பலி

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞசாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தோழி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவரது மகள் திவ்யதர்ஷினி ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் பவன்ரத்தினம் திவ்யதர்ஷினி மற்றும் பவன்ரத்தினம் இருவரும் சென்னை அக்னி கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

A college student and her girl friend killed in a two-wheeler accident on Vaniyambadi

இந்நிலையில் இன்று காலை திவ்யதர்ஷினி விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனது தோழியின் இல்லத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திவ்யதர்ஷினி முன்னதாக ஆம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த தனது கல்லூரி நண்பர் பவன் ரத்தினத்துடன் இருசக்கர வாகனத்தில் (புல்லட் ) கிருஷ்ணகிரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் இருந்து இன்று மாலை திரும்பி வரும் வழியில் வாணியம்பாடி செட்டியப்பணுர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் தடுப்பு சுவற்றின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தது பவன் குமார் தலையில் காயம் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். திவ்ய லட்சுமி மருத்துவமனை கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை

தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A college student and his friend were killed in a two-wheeler accident on the National Highway near Vaniyambadi in Tirupati district. Police are investigating the crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X