For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா தமிழக அரசு? ஒன்பதே ஓட்டுகளில்தான் இருக்கிறது எடப்பாடி எதிர்காலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, குறைந்தது, 117 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். ஏறத்தாழ 9 எம்.எல்.ஏக்கள் முடிவை வைத்துதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடருமா இல்லையா என்பது முடிவாகும் என்பதால் தமிழக அரசியலில், உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக எடுத்த முயற்சிகளுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கலகக் குரல் எழுப்பியதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்மொழிந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆனால், கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் மனது மாறுவதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, நாளை, சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். இதையடுத்து நாளை சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

சட்டசபை பலம்

சட்டசபை பலம்

தமிழக சட்டசபையின் மொத்த இடங்கள் 234 ஆகும். ஆர்.கே.நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டதால் தற்போது சட்டசபை பலம் 233 உறுப்பினர்கள் என்ற அளவில் உள்ளது. எனவே இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெறுபவரே முதல்வராக இருக்க முடியும். அதன்படி, குறைந்தபட்சமாக 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை.

அதிமுக பலம்

அதிமுக பலம்

சட்டசபையில் அதிமுகவுக்கு தற்போது சபாநாயகர் தனபாலையும் சேர்த்து 135 உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்கள் (சபாநாயகரை தவிர்த்து) ஆதரவு இருப்பதாக அவர் ஆளுநரிடம் பட்டியல் அளித்திருந்தார். பன்னீர்செல்வம் அணியில் அவர் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் (சபாநாயகரை தவிர்த்து) உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திரும்பினாலும் ஆட்சி கலைய வாய்ப்புள்ளது. ஆனால், ஒருவேளை ஒரு ஓட்டு வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்படுமானால் அப்போது சபாநாயகர் தனது வாக்கை பதிவு செய்யலாம். அவர் அரசுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பதிவு செய்ய முடியும். இப்போதுள்ள சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு முகாமை சேர்ந்தவர் என கூறப்படுவதால் அவர் அரசை ஆதரித்தே ஓட்டு போடுவார் என எதிர்பார்க்கலாம்.

சபாநாயகர் கையில் முடிவு

சபாநாயகர் கையில் முடிவு

சபாநாயகர் வாக்களித்தும் கூட அரசை காப்பாற்ற இன்னொரு வாக்கு தேவைப்படுமானால், நியமன உறுப்பினர் (ஆங்கிலோ இந்தியன்) நான்சி ஆன் சிந்தியா பிரான்சிசை வாக்களிக்க சபாநாயகர் உத்தரவிட முடியும். பொதுவாக நியமன உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டு போடுவதில்லை எனும்போதிலும், சபாநாயகர் நினைத்தால் அதை செய்ய வைக்க முடியும். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அப்போதைய சபாநாயகர் போப்பையா இதேபோன்ற ஒரு முடிவை எடுத்து அரசை காப்பாற்றியது வரலாறு. எனவே இவ்விருவர் வாக்குகளையும் எடுத்து பார்த்தால் 9 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சி நீடித்துக்கொண்டுள்ளது.

English summary
Governor Vidyasagar Rao’s decision to invite senior AIADMK leader E Palaniswami to form the next government in Tamil Nadu has made it near impossible for O Panneerselvam to retain his seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X