கரூரைப் பயமுறுத்தும் மர்மக் காய்ச்சல்- ஒரு சிறுமி பலி; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
கரூர்: கரூரில் வேகமாகப் பரவி வருகின்ற மர்ம காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள ஒத்தக்கடையைச் சேர்ந்த செல்வராஜ் மகள் தர்ஷினி. இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்த நிலையில் பரமத்தியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் விஷ காய்ச்சலின் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கடந்த புதன்கிழமை அச்சிறுமி கரூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி தர்ஷினி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் ஒத்தக்கடையைச் சேர்ந்த வீரா என்பவரின் மகன் விக்னேஷ், மகாமுனி மகள் சைலஜா, மகன் கிஷோர், பாப்பாத்தி ஆகிய நான்கு பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கரூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications