தாயினும் சாலப் பரிந்து.. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை காப்பாற்ற துடித்த நாய்!
Recommended Video

திருப்பூர்: திருப்பூரில் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனது 10 குட்டிகளையும் காப்பாற்ற ஒரு தாய் நாய் தவித்த தவிப்பு திருப்பூர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
மனிதர்களை விட விலங்குகளே உயர்வான பாசம் கொண்டவை. மனிதர்களை மிஞ்சி விடும் தாய்மை உணர்வும் விலங்குகளுக்கு உண்டு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது. திருப்பூரில் நேற்று இப்படி ஒரு பாசப் போராட்டத்தை நேரில் பார்த்து நெகிழ்ந்தனர் மக்கள்.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இல்லாத காலங்களில் தெருவில் வாழும் நாட்டு நாய்கள் நொய்யல் ஆற்றின் நடுவே உள்ள பாறை இடுக்குகளில் தங்குவது வழக்கம்.

ஆற்றில் சிக்கிய நாய்க்குட்டிகள்
காசிபாளையம் பகுதியில் உள்ள பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 குட்டிகளை ஈன்ற நாட்டு நாய் பாறைகளில் வைத்தே தனது குட்டிகளை வளர்த்து வந்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்றிரவு நீர் வரத்து அதிகரித்ததால் பாறையை சுற்றி நீர் நிறைந்துள்ளது.

தவிப்புக்குள்ளான குட்டிகள்
வெள்ளத்தில் சிக்காமல் தாய் நாய் மட்டும் வெளியேறிய நிலையில் 10 குட்டி நாய்களும் வெளியேற முடியாமல் தவித்துள்ளன. இதனை கண்ட தாய் நாய் நேற்றிரவு முதல் அப்பகுதியில் குரைத்துக் கொண்டே தவித்து வந்தது. நாய் தொடர்ந்து பாறையை பார்த்து குரைப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாறையில் நாய் குட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர்.

பத்திரமாக மீட்பு
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றின் நடுவே பாறைகளின் மீது தத்தளித்தபடி இருந்த 10 நாய் குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி நாய்களுக்கு அப்பகுதியினர் பால் உணவு உள்ளிட்டவற்றை உண்ண கொடுத்தனர்.

மரணிக்காத மனிதாபிமானம்
நாய்குட்டிகள் தானே என்று அலட்சியம் காட்டாமல் கடுமையாக முயற்சித்து நாய்குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் எடுத்துரைத்தது என்றால் அது மிகையாகாது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications