விருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

A private bus hits tractor and killed 3 on the spot near Viruthunagar

10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A private bus hits tractor and killed 3 on the spot near Viruthunagar. Over 10 injured and admitted in the hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற