For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு

Google Oneindia Tamil News

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீர்நிலைகளை தூர்வார தான் சேமித்து வைத்திருந்த பணத்தை மாணவன் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது..

Recommended Video

    நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு

    கடந்த ஒருமாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பிவிட்டன.

    ஆனாலும் ஆலங்குடி அருகே வரத்து வாரிகள் தூர்வாரப்படாததால் கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குளங்கள் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.

    2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல் 2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல்

    கனமழை, வெள்ளம்

    கனமழை, வெள்ளம்

    வங்கக் கடலில் இரண்டு முறை உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் அதி கனமழை பெய்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆறுகளில் ஓடும் வெள்ளத்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை படிப்படியாக மழை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 100 செ.மீ. க்கு மேல் மழை பொழிந்துள்ளதாகவும் இதன் காரணமாக கடந்த 2015ம் ஆம் ஆண்டை போலவே சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும் கூறப்படுகிறது.

    நீர் நிரம்பாத ஏரிகள்

    நீர் நிரம்பாத ஏரிகள்

    இப்படி தமிழகமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்து வாரிகள் தூர்வாரப்படாததால் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குளங்கள் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது என குற்றச்சாடு எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பல வருடங்களுக்கு பிறகு ஏரி, குளங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. ஆனால் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், செரியலூர் உள்பட பல கிராமங்களிலும் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    தூர்வாரவில்லை என புகார்

    தூர்வாரவில்லை என புகார்

    இதற்குக் காரணம் நீர் நிறைந்த குளங்களில் இருந்து வரும் பாதைகளான வாரிகள் வரத்து தூர்வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வாரிகள் வரத்தை தூர் வாரினால் பெரியாத்தாள் ஏரியில் தண்ணீர் நிரப்பினால் பல கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரித்தனர். கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி கிராமங்களை ஒருங்கிணைக்கும் பெரியாத்தாள் ஏரியில் தண்ணீர் வருவதற்காக "நீரின்றி அமையாது உலகு" என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருக்கும் பழைய கால்வாயை தூர் வாரி வருகின்றனர்.

    உண்டியல் பணத்தை வழங்கிய சிறுவன்

    உண்டியல் பணத்தை வழங்கிய சிறுவன்

    இந்நிலையில் கிரமங்கலம் கிராமத்தில் கால்வாய் சீரமைப்பு பணிக்காக அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மகன் கிஷோர் வீட்டில் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரத்து 96 ரூபாயை நிதியாக வழங்கினார். இந்த செயலை "நீரின்றி அமையாது உலகு" என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதன் மூலம் நீர்நிலைகளையும் இயற்கையையும் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் மட்டும் அல்ல சிறுவர்களிடம் வந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே...

    English summary
    A student who gave the money he had saved to clear water levels near Alangudi in Pudukkottai has been praised by the public. Kishore, the son of Vetrivel from the same village, donated Rs.1096
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X