உளுந்தூர் பேட்டையில் லாரி - ஆம்னி வேன் மோதல் : 10 பேர் படுகாயம் - வீடியோ
உளுந்தூர்ப்பேட்டையில் காய்கறி ஏற்றி வந்த லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்தபடி உள்ளன. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே காய்கறி ஏற்றி வந்த வேன் ஒன்று எதிரே வந்த ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதி கவிழந்தது.

இந்த விபத்தில் பத்துப் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவுமில்லை.

தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாலை பாதுகாப்பு வாரம் என போக்குவரத்துத் துறை பல விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டாலும் இம்மாதிரியான விபத்துகள் நடந்துகொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications