தீபா, ராஜா மீது கூறப்படும் அடுக்கடுக்கான புகார்கள் என்ன? .. பரபரப்புத் தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முட்டை வியாபாரியை ஏமாற்றிய ஜெ.தீபா- வீடியோ

  சென்னை : தீபாவும் ராஜாவும் தன்னிடம் ரூ. 1 கோடி வரை பண மோசடி செய்துள்ளதாக முட்டை வியாபாரி ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அவ்வப்போது சிக்கி வருகிறார். பேரவைக்கு உறுப்பினர் விண்ணப்பம் வழங்கியதில் முறைகேடு, போயஸ் தோட்டத்தில் சகோதரன் தீபக்குடன் சண்டை, பேரவைக்குள் கார் டிரைவர் ராஜாவின் தலையீடு அதிகம், கார் டிரைவர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதும் பின்னர் வெயிட்டான பதவி கொடுத்து மீண்டும் சேர்த்து கொள்வது என தீபா மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.

  இந்த நிலையில் அவரும், ராஜாவும் தன்னிடம் ரூ.1 கோடி கடன் வாங்கிவிட்டு இன்னும் தராமல் இழுத்தடிப்பதாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரியான ராமச்சந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

  தீபா தலைமை

  தீபா தலைமை

  அந்த புகாரில் ராமசந்திரன் கூறுகையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபாவால் தொடங்கப்பட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நான் இருந்தேன். தீபா கடனை அடைக்க சிரமப்பட்டு வருவதாகவும் அவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணம் தேவைப்படுவதாக ராஜா என்னிடம் கூறினார். இதனால் ரூ. 50 லட்சம் கடனாக கொடுத்தேன்.

  அவ்வப்போது பணம்

  அவ்வப்போது பணம்

  இந்நிலையில் மீண்டும் மீண்டும் பணப்பற்றாக்குறை என நீலி கண்ணீர் வடித்து ராஜாவும் தீபாவும் வந்து என்னிடம் அவ்வப்போது லட்சங்கள், ஆயிரங்களில் பணம் பெற்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு என்னை சந்தித்த ராஜாவும், தீபாவும் வீட்டில் வைத்திருந்த ரூ. 50 லட்சத்தை கணவர் மாதவன் எடுத்து கொண்டு போய் விட்டதால் மேலும் ரூ. 10 லட்சம் தருமாறு கேட்டு கொண்டனர்.

  சிறுக சிறுக பணம்

  சிறுக சிறுக பணம்

  இப்படியே இவர்கள் என்னிடம் சிறுக சிறுக ரூ.1 கோடிக்கு பணம் பெற்றுக் கொண்டனர். இது போதாக்குறைக்கு கட்சியினருக்கு பதவி வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் பணம் வாங்கியிருந்தனர். எனக்கும் அமைச்சர் பதவி பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தனர். அவர்கள் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது.

  கொலை மிரட்டல்

  கொலை மிரட்டல்

  இதனால் நான் அவர்களிடம் கொடுத்த ரூ. 1 கோடியை கேட்டேன். அதற்கு இருவரும் என்னை கொன்று விடுவதாக மிரட்டினர். எனவே தீபா மற்றும் ராஜா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது புகார் மனுவில் ராமசந்திரன் கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜா, தீபாவிடம் மோசடி குறித்து எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Egg trader accuses J.Deepa and her car driver Raja for cheating Rs. 1 crore and they promises to make the trader a minister.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற