திருவண்ணாமலை அருகே ஆட்டோ - கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: போளூர் அருகே ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாயினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டுவாடி அருகே ஆட்டோ ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

Accident near Thiruvannamalai kills two

இதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Accident near Thiruvannamalai kills two person. Auto and car hits near Polur in Thiruvannamalai district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற