நடிகர் தாடி பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்-வீடியோ

திருப்பூர்: திருப்பூர் கோர்ட்டில் நடிகர் தாடி பாலாஜி வழக்கு விசாரணைக்காக ஆஜர் ஆனார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் திருப்பூரில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்ஸியை சேர்ந்த ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டனர். அதனையடுத்து அந்தத் தனியார் ஏஜென்ஸியின் மேலாளர் பரதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

Actor Balaji appeared in Tiruppur court

அதனையடுத்து விஷ்ணுவர்த்தன் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், மோசடி செய்த பணத்தில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக நடிகர் தாடி பாலாஜியிடம் 5 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்ததாகக் கூறினார்.

அந்த வழக்கு திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதனையடுத்து அங்கு வழக்கு விசாரணைக்காக நடிகர் பாலாஜி ஆஜரானார். மேலும், இந்த வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Balaji appeared in Tiruppur court in money fraudulent case.
Please Wait while comments are loading...