For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவில் மேலும் ஒரு "காமெடி".. கட்சியில் சேர்ந்தார் "போண்டா" மணி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் போண்டா மணி. தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெயா டிவியில், நடிகர் சிங்கமுத்துவுடன் இணைந்து நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு நிகழ்ச்சியில் கலந்து கொணடவர் போண்டா மணி. தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்துள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் போண்டா மணி. தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தவர். வடிவேலு பீக்கில் இருந்தபோது அவருடைய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தவர். "மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும், என்னண்ணே இது தக்காளிச் சட்னி வருது" என்ற பிரபல வசனங்களில் இடம் பெற்ற நடிகரும் கூட.

Actor Bonda Mani joins ADMK

தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதுதவிர வடபழனி முருகன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் கண்மணி; திமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், திருவாரூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான விஜயகுமாரி; திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வழக்கறிஞர் இமாலயா அருண் பிரசாத்; நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்போலஸ் நேசமணி உள்ளிட்ட பலரும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் சிங்கமுத்து, மனோபாலா, குண்டு ஆர்த்தி என பல காமெடியன்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் இன்னொரு காமெடியாக போண்டா மணி இணைந்துள்ளார்.

English summary
Comedy actor Bonda Mani has joined ADMK today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X