கொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கமல் கண்டனம்.. அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

  சென்னை : சென்னை கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து 2 குழந்தைகள் பரிதாகமாக உயிரிழந்ததற்கு நிதியுதவியும் அரசின் அனுதாபமும் மட்டும் போதாது, இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் குடிசைமாற்றுப் பகுதியைச் சேர்ந்த பாவனா மற்றும் யுவஸ்ரீ வீட்டிற்கு அருகில் இருந்த கடைக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.

   Actor Kamalhaasan urges goverment to ensure the safety from electricity accidents

  அப்போது தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில் சிறுமிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிறுமிகள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார்.

  அதில் கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamalhaasan urges government to ensure not such an incidents like Kodungaiyur 2 child death due to elecctricity circuit nad also he adds ccondolence and helping fund is not only a remedy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற