டெங்குவுக்கு என் தங்கச்சி மகளும் பலி... துயரத்துடன் கலங்கிய கருணாஸ்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டெங்குவால் உயிரிழந்த கருணாஸின் உறவினர்-வீடியோ

  மதுரை: டெங்குக் காய்ச்சலுக்கு என் தங்கையின் பத்து வயது மகளும் பலியாகிவிட்டாள். தமிழக அரசு உயிரிழப்புகளைத் தடுக்க போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ''இப்போது நான் ராமநாதபுரத்துக்கு துக்க காரியத்துக்கு சென்றுகொண்டுள்ளேன். என் தங்கையின் பத்து வயது மகள் டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டாள். அதே பகுதியில் ஒரு இளைஞரும் இறந்துவிட்டார்.

  Actor Karuna's niece died in dengue fever at Ramnad

  மருத்துவமனைகளில் 100 பேர் அனுமதிக்கப்படும் இடத்தில் தற்போது டெங்குக் காய்ச்சலால் 1000 பேர் உள்ளனர். ஆனால், அந்த 1000 பேருக்கான மருந்துகளும் மருத்துவர்களும் இல்லை.

  தமிழக அரசு தற்போதுள்ள நிலையை புரிந்துகொண்டு, இனியாவது உயிரிழப்புகளைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாஸ் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Karuna's niece died in dengue fever at Ramnad and he requested the government to take necessary steps to stop further deaths.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற