ரூ.10 கோடி மோசடி.. பவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது.. திஹார் போகிறார்!
ரூ. 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர்.
சென்னை: 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 10 கோடி ரூபாய் கமிஷன் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகார். ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புகார்கள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் கமிஷன் தொகை வாங்கியுள்ளார் சீனிவாசன். ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர்ஸ்டார் ஏமாற்றிவிட்டார்.
இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் தெரிவித்தார் திலீப் இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் சீனிவாசனை கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஒருவழியாக தண்டனையில் இருந்து தப்பிய சீனிவாசன் சில படங்களில் நடித்து வந்தார்.

டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தும் பவர்ஸ்டார் சீனிவாசன் செல்லவில்லை. இதனையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா நகரில் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications