கோபாலபுரத்தில் ரஜினி... திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களின் 20ஆண்டு கால எதிர்பார்ப்பான அரசியல் பிரவேசத்தை கடந்த 31ஆம் தேதி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.

Actor Rajinikanth meets DMK leader Karunanidhi today?

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர வலுத்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கட்சிப்பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கருணாநிதியின் உடல்நிலையையும் கேட்டறிய உள்ளார். கோபாலபுரத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினியை வரவேற்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth meets DMK leader Karunanidhi today sources says. Rajinikanth is busy in his political work at this time he is going to meet Karunanidhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற