மறியலால் ஒன்றும் ஆகாது: காவிரி அரசியலை உடைக்க வேண்டும், உடைப்பேன்.. சிம்பு உறுதி #UniteForHumanity

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிம்புவின் கோரிக்கையை ஏற்ற கன்னடர்கள் நெகிழ்ச்சி வீடியோ

  சென்னை: காவிரி விவகாரத்தில் அரசியலை உடைக்க வேண்டும் அதை நிச்சயம் நான் உடைப்பேன் என்று நடிகர் சிம்பு உறுதியாக தெரிவித்தார்.

  இதுகுறித்து கர்நாடக செய்தி நிறுவனத்தில் சிம்பு பேசுகையில் முதலில் நான் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குள் மனிதம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டனர். உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

  கர்நாடக பொருத்தவரை தண்ணீர் தரமாட்டார்கள், நாங்கள் தண்ணீர் தாருங்கள் என்று கேட்போம். கன்னடர்கள் நல்ல நட்பு பாராட்டும்போது ஏன் தண்ணீர் தர மறுக்கின்றனர் என்பது குறித்து நான் நிறைய நாட்கள் யோசித்துள்ளேன். ஆனால் இப்போது அவர்களுக்குள் இருக்கும் மனிதநேயத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  கோபம் , வேற்றுமை

  கோபம் , வேற்றுமை

  நீங்கள் கர்நாடக மக்கள் கிட்ட சொல்லுங்க... தமிழக மக்களும், கர்நாடக மக்களும் வெவ்வேறானவை என நினைத்தது கிடையாது. நமக்குள் இருக்கும் பிரச்சினையை சரியா பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயத்தை வேறு ஒரு காரணத்துக்காக சில பேரால் கோபம், வேற்றுமை, வெறுப்புகள் உருவாகிவிட்டது.

  தண்ணீர் தருவோம்

  தண்ணீர் தருவோம்

  இதுதான் பிரச்சினை. எனவே அந்த கோபம், வெறுப்புகளை உடைக்க வேண்டும்.மக்களாகிய நாம் ஒன்றாகத்தான் இருப்போம். கன்னட மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீரை தருவோம், நாங்கள் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று நினைத்ததே இல்லை என்ற உணர்வை வெளிகாட்டினாலே போதும் தடங்கல்கள் அனைத்து உடைந்துவிடும்.

  அரசியலை உடைக்க

  அரசியலை உடைக்க

  இரு மாநிலத்துக்கு இடையே உள்ள மனிதாபிமானம் 100 சதவீதம் கடந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதற்காக இதை செய்யவில்லை. அரசியலுக்கு நான் வரவே மாட்டேன். இந்த விவகாரத்தை வைத்து நான் அரசியலும் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் உள்ள அரசியலை உடைக்கவே நான் இப்படி செய்தேன்.

  அன்பு போதும்

  அன்பு போதும்

  நான் தப்பு செய்ய வேண்டும் என்றால்தான் எனக்கு ஆட்சி அதிகாரம் தேவை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் எனக்கு ஆட்சியோ அதிகாரமோ அரசியலோ வேண்டாம். மக்களின் அன்பும், மனமும் மட்டுமே எனக்கு போதும். அதற்காக நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

  ஒற்றுமையை விரும்புகிறேன்

  ஒற்றுமையை விரும்புகிறேன்

  ரஜினி, கமல் உள்ளிட்டோர் காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என கேட்பதில் தவறில்லை. நான் கூட 5 ஆண்டுகளுக்கு முன்பு இதைத்தான் கேட்டேன். ஆனால் தற்போது நமக்கு தேவை மக்களின் ஒற்றுமை நிரூபிப்பதுதான். அதை புதுமையான முறையில் செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். காவிரி விவகாரத்தில் உள்ள அரசியலை உடைக்க வேண்டும் என கடவுள் என்னிடம் கூறியதால் இந்த விவகாரத்தை முன்னெடுத்து செய்தேன். எனவே மூத்த நடிகர்களின் கோரிக்கையை தவறு சொல்லக் கூடாது. அவர்களும் ஒற்றுமையை காண்பிக்கவே விரும்புகின்றனர்.

  சண்டை போடுவதால் ஒன்றும் நடக்காது

  சண்டை போடுவதால் ஒன்றும் நடக்காது

  நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மக்கள் காட்டிவிட்டால் , நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சண்டை போடுவதாலோ போராட்டம் செய்வதாலோ நடக்க போவது ஒன்றும் இல்லை. சிலர் இந்த விவகாரத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதை உடைக்கவே விரும்பினேன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Simbu says that there will be politics in Cauvery issue. But my appeal reveals that the people of Karnataka ready to give water, so we have to break the politics, i will do this.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற