நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு.. தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரி ரத்துக்கு கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகள் மீதான தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

திரையரங்குகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டிவரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால், மாநில அரசால் கேளிக்கை வரியை விதிக்க முடியாது. இருப்பினும் தமிழக அரசோ, 30 சதவீத கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால் இரு வரிகளையும் சேர்த்து கட்டும் நிலைக்கு தமிழக சினிமாத்துறை தள்ளப்பட்டுள்ளது.

Actors meets Chief Minister Edappadi Palanisamy and urged to cancel the entertainment tax on theaters

கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடந்த சனிக்கிழமை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், சூர்யா ஆகியோர் இன்று சந்தித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி, தமிழகத்தில் திரையரங்குகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The actor's association leaders met Chief Minister Edappadi Palanisamy and urged to cancel the entertainment tax on theaters.
Please Wait while comments are loading...