எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா அநாகரீக பேச்சு! பொங்கி எழுந்த கவுதமி! என்ன சொன்னார் தெரியுமா
சீர்காழி: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை குறைவாக பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தகுதியும் இல்லை என நடிகை கவுதமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
சீர்காழி கோயிலுக்கு வந்த நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா பேசிய வார்த்தைகளும் பேசிய விதமும் பலவிதத்தில் மிகவும் தவறான விஷயம்.

எடப்பாடியை விட ஆதவ் அர்ஜுனா வயதில் சிறியவர். தமிழ் மண்ணில் பிறந்து இந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் முதலில் கற்று கொள்வது பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது! எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கக் கூடிய தகுதி இல்லை. அவருக்கு தகுதி இருக்கானு கூட நான் கேட்க மாட்டேன். அவருக்கு தகுதியே இல்லை.
ஆதவ் அர்ஜுனா, அரசியலில் ஒழுங்காக காலே எடுத்து வைக்கவில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அப்படியிருக்கும் போது அரசியலில் இத்தனை வருஷமாக இருந்து 4 ஆண்டுகள் முதல்வராக இருந்து வெற்றிகரமாக பல்வேறு சாதனைகளை புரிந்தவர் எடப்பாடி.
ஒருங்கிணைத்து
மேலும் எல்லாரையும் ஒருங்கிணைத்து கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அடிமட்டத்தில் இருந்து இத்தனை பெரிய பதவியில் இருக்கும் எடப்பாடியை, ஆதவ் அர்ஜுனா விமர்சிக்க தகுதியே இல்லை. இதுவரை எடப்பாடி பழனிசாமி எத்தனை வலுவான விமர்சனங்களை முன் வைத்திருந்தாலும் யாரையும் இதுவரை தரக்குறைவாகவோ மரியாதை இல்லாமலோ விமர்சித்ததில்லை.
விமர்சனம்
அவர் தனது விமர்சனத்தில் எப்போதுமே நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார். அவரது விமர்சனங்கள் உண்மையாக, நேர்மையாக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் நாகரீகமாகவும் இருக்கும்.
பொது வாழ்க்கை
ஆதவ் அர்ஜுனாவுக்கு பொது வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அவர் முதலில் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அது போல் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் அளவுக்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொது மேடை
பொது மேடையில் ஒரு தலைவரை பார்த்து நிறைய பேர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஆதவ் அர்ஜுனாவை பார்த்து யாரும் இது போல் மரியாதை குறைவாக பேச கற்றுக் கொள்ள கூடாது. இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல தேவையில்லை, நான் சொல்லிவிட்டேன், எங்கள் கட்சியினர் பதில் அளிப்பார்கள்.
பெரியவர்களை மதித்தல்
பெரியவர்களை மதித்தல் என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயமாகும் என்றார். அதிமுக கூட்டணியில் தவெக உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்விக்கு, கவுதமி, அது போக போகத்தான் தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடப்பாடியார் எடுப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நான் போட்டியா
2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சிரித்த கவுதமி, அதுதான் சொன்னேனே, எடப்பாடியார் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். நான் ஆரம்பத்தில் இருந்தே என்ன சொல்லி வருகிறேன் என்றால், அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்.
அதிமுக ஆட்சி
மக்களுக்கு நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும். அந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வர வேண்டும். அதிமுக ஆட்சி அமைய அத்தனை உழைப்பையும் கொடுப்போம் என கவுதமி தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன
சமூகவலைதளத்தில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இணைந்து பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆதவ், எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலையையும் தரக்குறைவாக பேசும்படி இருந்தது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் ஆதவ், வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications