ஒரே ஒரு நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார்... நானோ நெருங்கவிடவில்லை... நிலானி பரபரப்பு பேட்டி
Recommended Video

சென்னை: ஒரே ஒரு நாள் மனைவி போல் இரு அது போதும் என்றார் லலித்குமார் , ஆனால் நானோ அவரை என் அருகே நெருங்கவிடவில்லை என நடிகை நிலானி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நடிகை நிலானி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா உதவி இயக்குநர் லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் சென்னை கேகே நகரில் நடுரோட்டில் கடந்த 16-ஆம் தேதி தீவைத்து கொளுத்தி கொண்டார். தற்கொலைகக்கு நிலானிதான் காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் நிலானியின் பேஸ்புக் மூலமாக லலித்குமாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலில் மெட்டி போட்டு போட்டோ
இதையடுத்து நடிகை நிலானி தலைமறைவு என கூறப்பட்ட நிலையில் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் என்னை பல முறை உடல் ரீதியாக நெருங்க முயன்றார் எதற்கும் நான் அனுமதிக்கவில்லை. ஒரே ஒரு நாள் மனைவி போல் இரு உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறி காலில் மெட்டி போட்டு கூடவே இருந்து போட்டோ எடுத்தார்.

எரித்து கொள்வேன்
ஒரு கட்டத்தை நாம் வாழ வேண்டாம் நீயும், நானும், உன் குழந்தைகளும் ஒன்றாக செத்துவிடுவோம் என்று மிரட்டினார். பெட்ரோல் கேனை வைத்து கொண்டு அடிக்கடி என்னை மிரட்டினார் லலித். கடந்த சனிக்கிழமை அன்று மயிலாப்பூரில் சூட்டிங்கில் இருந்த போது லலித்குமார் என்னை தொடர்பு கொண்டு வெளியே வந்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் என சொல்லாவிட்டால் தீவைத்து எரித்து கொள்வேன் என்றார்.

தீவைத்துக் கொண்ட லலித்
ஆனால் நானோ மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பின்னர் கே கே நகரில் சூட்டிங்கில் இருந்த போதும் இதுபோல் டார்ச்சர் செய்தார். அப்போது என்னை விட்டு விடு எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்றேன். ஆனால் 12 மணிக்கு யாரோ தீ வைத்துக் கொண்டதாக எனது அசிஸ்டென்ட் கூறியதும் கே கே நகர் போலீஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்தேன்.

தவறான தேர்வு
அப்போது லலித் என்று சொன்னார்கள். உடனே மனிதாபிமான அடிப்படையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். எனவே எந்த வகையிலும் லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல. எனக்கும் என் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் எனக்கென ஒரு கணவர் வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது தவறான தேர்வு என்றவுடன் ஒதுங்கிவிட்டேன், இது தவறா என்று கேட்டார் நிலானி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications